Friday, March 30, 2012

Electricity bill increase

மின் கட்டணம் உயர்வு குறித்து முழு தகவலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வு குறித்த முழு விபரம்....

மாதம் தோறும் நிலைக்கட்டணமாக நுகர்வோர் ரூ. 10 மின்சார வாரியத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது. 2 மாதத்திற்கு 20 ரூபாய் மின்கட்டணத்தோடு செலுத்த வேண்டி இருக்கும்.

மற்றப்படி, வீடுகளில் மின்கட்டணம் முதல் 100 யூனிட் வரை - ரூ.1.10,
101-200 யூனிட் வரை - ரூ.1.80,

200 - 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு

முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3 வசூலிக்கப்படும்.

201 - 500 யூனிட் வரை ரூ.3.50 வசூலிக்கப்படும்

501 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.75 வசூலிக்கப்படும்

விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்டுக்கு கட்டணம் இல்லை. 500க்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 வசூலிக்கப்படும்

வழிபாட்டுத்தலங்களுக்கு 120 யூனிட் வரை தலா ரூ.2.50 வசூலிக்கப்படும். 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5 வசூலிக்கப்படும்.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 500 யூனிட் வரை ரூ. 3.50 கட்டணம் வசூலிக்கப்படும். 501 மேல் ரூ. 4 கட்டணம் வசூலிக்கப்படும்

தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு ரூ.5.50 வசூலிக்கப்படும்

வர்த்தக நிறுவனங்களுக்கு 1-100 யூனிட் வரை ரூ. 4.30 கட்டணம் வசூலிக்கப்படும். 101 யூனிட்டுக்கு மேல் ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்படும்.

குடிசை தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட் வரை ரூ.3.50 எனவும்,
100க்கு மேல் ரூ. 4 எனவும் வசூலிக்கப்படும்.

தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம், ஐ.டி. நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது யூனிட்டுக்கு ரூ. 5.50 வசூலிக்கப்படும்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோர் யூனிட்டிற்கு ரூ. 10.50 செலுத்த வேண்டும்.

இந்த கட்டண நிர்ணயமானது வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.



Table: Existing and new tariff (Low tension supply)
Table: Existing and new tariff (High tension supply)
Enclosed the report given by TNERC

No comments:

Post a Comment