Wednesday, May 23, 2012

+2 பொது‌த் தே‌ர்வு : சேவாலயா 100% தே‌ர்‌ச்‌சி

சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி இவ்வருடமும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 

இவ்வருடம் 117 மாணவர்கள் ப‌னிரெ‌ண்டாவது பொதுத்தேர்வு எழுதினர். எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் ஏழை, எளிய, ஆதரவற்ற மற்றும் முதல் தலைமுறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகள். இவர்களில் 21 மாணவர்கள் 1200க்கு 1000க்கு மேல் மதிப்பெண் பெற்று‌ள்ளன‌ரஎ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. 

பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் வருமாறு... 
WD

பிரவீன் குமார் என்னும் மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு 1086 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளார். இம்மாணவனின் தந்தை ஒரு தனியார் வாகன் ஓட்டுனராக உள்ளார். தாயார் இல்லத்தரசியாக உள்ளார்.

ஜோதிலட்சுமி என்னும் மாணவி 1200 மதிப்பெண்களுக்கு 1084 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இம்மாணவியின் தந்தை ஒரு தனியார் கம்பெனியில் இரும்பு பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். தாயார் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறா‌். 

ஜான்சி என்னும் மாணவி 1200 மதிப்பெண்களுக்கு 1071 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3வது இடத்தை பெற்றுள்ளார். இவரது தந்தை வேலை இல்லாதவர். இவரது தாய் கட்டிட்த் தொழிலாளியாக பணிபுரிகிறார்.

அரவிந்த் குமார் என்னும் மாணவனு‌ம் 1200 மதிப்பெண்களுக்கு 1071 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3வது இடத்தை பெற்றுள்ளார். இம்மாணவனின் தந்தை ஒரு தனியார் கம்பெனியில் இரும்பு பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். தாயார் இல்லத்தரசியாக உள்ளார்.

No comments:

Post a Comment