Saturday, September 1, 2012

New rules for cellphone towers & headset manufactures


புதுடில்லி: செல்போன் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் செல்போன் ஹேண்ட் செட்டுகள் குறித்து புதுவிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய தொலை தொடர்‌புத்துறை அமைச்சர் ‌தெரிவித்தார். செல் போன் கோபுரங்களால் அதிகளவு கதிர்வீச்சுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் புதிய விதிகள் குறித்து விளக்கினார். 

இது தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் வருமாறு:
‌செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும். இரு செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 35 மீ தொலைவில் இருக்க வேண்டும். 

மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அ‌ட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source : Dinamalar

No comments:

Post a Comment