பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில்அனுஷத்திலும்பவுர்ணமி அமையும். ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது பூராடம் என்றும், உத்தர ஆஷாடம் உத்திராடம் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் ஆஷாடீ எனப்பட்டது. அதுவே தமிழில் ஆடி என்று மருவி விட்டதாகச் சொல்வர். |
ஆடியில் வித்தியாசமான விழாக்கள்:
ஆடி மாதத்தில் எல்லா கோயில்களுமே திருவிழா காணும். என்றாலும் சில கோயில்களில் வித்தியாசமான விழாக்கள் நடக்கும்.
கோயம்புத்தூர் ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் முப்பெரும் தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ஆடிமாதத்தில் இம் மூன்று தேவிகளுக்கும், முதல் மூன்று வாரங்கள் பூக்களாலேயே தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் பல வகைப் பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கு வரலட்சுமி நோன்பு விழா நடத்துவார்கள். அப்போது மாங்கல்ய சரடு வைத்து பூஜித்து கோயிலு<க்கு வரும் பெண்களுக்கு வழங்குவர்.
சேலம் ஏழு பேட்டைகளில் நடைபெறும் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா நடக்கும். இங்குள்ள அன்னதானப்பட்டியில் ஆடிப் பெருவிழாவின்போது பொங்கல் படையலும், குகை மாரியம்மன் கோயிலில் வண்டி வேடிக்கை விழாவும் மிகவும் சிறப்பானது. செருப்படி விழாவன்று வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து கோயில் பூசாரியிடம் தருவார்கள். பூசாரி, அந்த செருப்பினால் பக்தர்கள் தலையில் ஒருமுறை லேசாகத் தட்டுவார். இப்படிச் செய்வதால் தீவினை, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சேத்து முட்டிவிழா நாளில் உடல் முழுதும் சேறு பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். அதற்கு அடுத்த விழா சங்கராபரண விழா. இப்படி விழாக்களை விதம் விதமாக சேலத்தில் நடத்துகின்றனர்.
புதுச்சேரி அருகே வங்கக்கடலோரம் செங்கழுநீர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா விமரிசையாய் நடத்துவர். புதுச்சேரி கவர்னரே அன்று இங்கு வந்து தேர்வடம் பிடித்து விழாவைத் தொடங்கி வைப்பார். இதை அரசு விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறையும் விடுவார்கள்.
கேரள மாநில ஆலப்புழையில் தண்ணீர் முக்கம் பஞ்சாயத்து மருந்தோர் வட்டம் என்ற ஊரில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மட்டும் காய்கறி பிரசாதம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ரத்த சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாதித் திருநாள் மகாராஜா இதை உட்கொண்டு நோய் நீங்கியுள்ளார் என்பர். கடுமையான அரிப்பு தரும் காட்டு சேப்பங்கிழங்கு இலைத் தண்டுகளை நறுக்கி அதனுடன் சில பொருட்கள் சேர்த்து செய்யப்படும் பிரசாதம் இது.
உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகா தேவிக்கு சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் கூழும் தந்து உபசரித்தனர். இந்நிகழ்வு நடந்தது ஆடி மாதத்தில் எனவே தான் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் வேப்பிலை ஆடை அணிந்தும், கூழ் வார்த்தும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
நாச்சியார் கோயில் கருடன் கருங்கல்லால் வடிக்கப்பட்ட பெரிய திருமேனி கொண்டவர். தன் திருமேனியில் ஒன்பது நாகங்களை அணிந்துள்ளார். இவருக்கு அமிர்தகலசம் நிவேதித்து வணங்க. நவகிரகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகள் விலகும்.
திருநின்றவூர் நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து, மஞ்சளாடை தரித்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுகின்றனர்.
செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பர், அன்று மாலை அம்மன் புற்றுக் கோயிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைவாள். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் பூங்கரகத்தின் முன் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
திருவாலங்காட்டு வண்டார்குழலி அம்மனுக்கு ஆடியில் வளைகாப்பு உற்சவம் நடத்துவர். அந்த வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால் மகப்பேறு கிட்டுகிறது.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யா பூஜை முறைப்படி விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் உள்ள கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கையின் முழு உருவத்தையும் ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 வரை மட்டுமே தரிசிக்கலாம், மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளிகளில் ஒன்பது அர்ச்சகர்கள் ஒன்பது வித மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வது நவசக்தி அர்ச்சனை என போற்றப்படுகிறது.
திருச்சிக்கு அருகே திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் ஆதவன் தன் கிரணங்களால் அங்கு அருளும் ஈசனை வழிபடுகிறான். காசி போன்ற விமானம் கொண்ட ஆலயம் இது.
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர். ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம். இந்த விழாவில் இவ்வூரின் கிழக்கு எல்லையில் உள்ள மாங்குளம் குளக்கரையிலிருந்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பக்தர்கள் தங்களை மலர்களாலும் சந்தனத்தாலும் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களாலும் அலங்கரித்துக் கொண்டு தீ மிதிக்கத் தயாராவார்கள். இவர்கள் குமாரமக்கள் என அழைக்கப்படுவர். ஆத்மார்த்தமான பக்தியோடும் தீ மிதிப்பவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து அருள்கிறார்கள் அன்னை.

No comments:
Post a Comment