Friday, October 7, 2011

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஐநா சபையில் சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்திரியா சென்றுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதனை தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது, இந்தியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே, ரயில்வே தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் தொடர்பாக இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ஊழலுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதீபா பாட்டீல் கூறினார்.

No comments:

Post a Comment