"கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் அச்சம் குறித்தும், அணு உலை பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்,'' என, மத்திய நிபுணர் குழு உறுப்பினர் மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் கூறினார். கூடங்குளம் அணு உலை குறித்து, மக்களின் அச்சத்தைப் போக்க, 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், நாகர்கோவிலைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் இடம் பெற்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த விண்வெளி மற்றும் கடலியல் விஞ்ஞானியான முத்துநாயகம், கூடங்குளம் பிரச்னை குறித்து, "தினமலர்' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அதையொட்டிய பிரச்னை குறித்து என்ன சொல்கிறீர்கள்? நாட்டின் வளர்ச்சிக்கு, மின்சாரம் முக்கிய தேவை. வளர்ச்சிப் பணிகளுக்கு, மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியம். அதேநேரம், மக்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம். நாட்டு வளர்ச்சியாகட்டும், மக்களின் பாதுகாப்பாகட்டும், இவ்விரண்டில் ஒன்றைக் கூட, நாம் புறக்கணிக்க முடியாது.
கூடங்குளம் பிரச்னையில், உங்கள் குழு என்ன செய்யப் போகிறது?
மத்திய அரசிடமிருந்து, எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அறிவிப்பு வந்ததும், மத்திய அரசு என்ன சொல்கிறது; மக்கள் பிரச்னை என்ன; அரசின் நிலை என்ன; உண்மை நிலை என்ன என்பதை, முழுமையாக, விரிவாக ஆய்வு செய்வோம்.
இப்பிரச்னையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
நிபுணர் குழு உறுப்பினர்கள் அனைவரும், பல இடங்களில் இருக்கிறோம். முதலில், குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்த வேண்டும். இது, நாடு மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய விஷயம் என்பதால், முறையான திட்டமிடுதல் வேண்டும். இதற்கு அரசின் வழிகாட்டுதல்கள், ஒத்துழைப்புகள் தேவை.
நிபுணர் குழு உறுப்பினர்கள் அனைவருமே, ஒவ்வொரு துறைகளில் சிறந்தவர்கள் என்பதால், அனைவருடைய ஆய்வும், கருத்துக்களும், பிரச்னையைத் தீர்க்க பெரிய அளவில் பயன்படும்.
கூடங்குளம் திட்டத்தின் உண்மை நிலை என்ன, எந்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து, விரிவாக ஆய்வு செய்வோம்.
கூடங்குளம் அணுமின் நிலையம் போவீர்களா?
நிச்சயமாக! கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்தை நிபுணர் குழு பார்வையிட்டு, அது அமைந்துள்ள சூழல் குறித்தெல்லாம், விரிவான ஆய்வு நடத்துவோம்.
போராட்ட மக்களை சந்திப்பீர்களா?
அணு உலையால் அச்சம் அடைந்துள்ள, மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசினால் தான், அவர்களின் கவலையும், அச்சமும் நமக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும், மக்களின் பாதுகாப்பு விஷயத்தில், சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. அணு மின் நிலைய செயல்பாடுகள் குறித்தும், மக்களின் அச்சம் குறித்தும், அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்வது தான், எங்கள் முதல் பணி.
எப்போது அறிக்கை தருவீர்கள்?
இதில், அறிக்கை முக்கியமல்ல. அச்சத்திற்கான காரணங்கள், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பப் பிரச்னைகள் ஆகியவற்றின், உண்மை நிலையை ஆராய்வது தான் முதல் பணி. மக்கள் கூறும் எந்த பிரச்னையானாலும், அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே, எதையும் சொல்ல முடியும்.
மக்கள் அச்சத்தை எப்படி போக்கப் போகிறீர்கள்?
ஜப்பானில் சுனாமியால், புகுசிமா அணு உலையில் நடந்த விபத்து தான், மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அந்த சாத்தியக்கூறுகள், உலகில் எல்லா இடத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது; இல்லை என்றும் சொல்ல முடியாது.
ஆனால், புகுசிமா விபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை, மற்ற இடங்களில் சரி செய்வது முக்கியம். எங்களை பொறுத்தவரை, மக்களின் பாதுகாப்பை நிச்சயம் உறுதி செய்வோம். அதற்கு என்ன தேவையோ செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலியலில் விருது பெற்ற விஞ்ஞானி : மூத்த விஞ்ஞானி ஏ.இ.முத்துநாயகம், நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலையின் ஆலோசகர் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினராக உள்ளார். கடலியல் மற்றும் விண்வெளித் துறை மூத்த விஞ்ஞானியான இவர், இந்திய ராக்கெட் எரிபொருள் தொழில்நுட்பத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்து சாதனைகள் புரிந்தவர். சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்பக் கல்லூரியில், கடலியல் துறை தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இந்திய கடலியல் துறை செயலர், கேரள மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவர், அண்டார்டிக் கடல் வாழ் உயிரின பாதுகாப்பு கமிட்டி தலைவர் உட்பட, பல பதவிகளில் இருந்துள்ளார். கடலியல் துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இவருக்கு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment